மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1338 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1338 days ago
இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமாவாக உருவாகியுள்ள படம் “முதல் நீ முடிவும் நீ”. சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நியூயார்க் திரைப்பட விருது விழாவில், 'முதல் நீ முடிவும் நீ' திரைப்படம் சிறப்புமிகு கவுரவ விருதை வென்றுள்ளது. அதேபோல், மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் பிலிம் விருது விழாவில் 'சிறந்த இயக்குனர்' விருதையும் வென்றுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா, இப்படத்தை எழுதி இயக்குவதுடன், இசையும் அமைத்துள்ளார். அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார் உட்பட பல இளம் நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ளார். இப்படம் ஜன.,21ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
1338 days ago
1338 days ago