மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1338 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1338 days ago
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று வெளியேறியுள்ளார் அக்ஷரா. மாடல் மற்றும் நடிகையான இவர், தமிழ்நாட்டு மக்களிடம் முன்னதாக பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. ஆனால், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி அக்ஷராவுக்கு அடையாளத்தை பெற்று தந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவை சமூக வலைத்தளம் தொடங்கி ஊடகம் வரை அனைவரும் பின் தொடர்கின்றனர். அந்த வகையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரகசியத்தை எதார்த்தமாக உடைத்துள்ளார்.
அந்த பேட்டியில், அக்ஷராவிடம், வருணுக்கு பிக்பாஸ் வீட்டில் படுக்கையறையில் முத்தம் கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்படுகிறது அதற்கு பதிலளித்த அக்ஷரா, 'நான் வருணுக்கு முத்தம் கொடுக்கல. பெக் தான் பண்ணேன். அதுவும் வருண் போட்டுருந்த ஷர்ட் ஹூட் மேல பெக் பண்ணேன். ஆனால், பிக்பாஸ்ல அப்படியா காமிச்சாங்க?' என கேட்டுள்ளார்.
வருண் மற்றும் அக்ஷரா பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். வெளியில் வந்த பிறகும் இருவரும் அடிக்கடி பொது இடங்களில் சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்கள் காதலிக்கிறார்களா? என்ற வதந்தியுடன் பிக்பாஸ் முத்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. ஆனால், அதற்கான சரியான சரியான விளக்கத்தை அக்ஷரா தற்போது கொடுத்துள்ளார்.
1338 days ago
1338 days ago