10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்'
ADDED : 9 hours ago
அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்துள்ள படம் 'வித் லவ்'. இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்தார். சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
காதல் கதையில் இளைஞர்களை கவரும் வகையில் இப்படம் வெளியானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. தற்போது இப்படம் வெளிவந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலைக் கடந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தாண்டில் இதுவரை வெளியான படங்களில் இரண்டாவது வெற்றி படம் இதுவாகும். முன்னதாக ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படமும் வரவேற்பையும், சுமார் 30 கோடி வசூலையும் கடந்து வெற்றி பெற்றது.