உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? இனி போரடிக்கும்!

பிக்பாஸ் சீசன் 5: இவங்களும் எவிக்சனா? இனி போரடிக்கும்!

பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒரே சண்டைகோழி என்றால் அது தாமரை செல்வி தான். அன்பு என்றாலும் சரி, அடிதடி என்றாலும் சரி வெளுத்து வாங்கிவிடுவார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், இந்த சீசனில் தாமரை மட்டுமே ஆறுதலாக இருந்தார். ஆனால், இந்த வார எவிக்ஷனில் தாமரை வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணப்பெட்டி டாஸ்க்கிலேயே தாமரை வெளியேறி இருக்க வேண்டும் என பலரும் அட்வைஸ் செய்து வந்தனர். பாவனி கூட 'பணம் தேவை இருந்தால் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்' என சொல்லியிருந்தார். ஏனென்றால் தாமரைக்கு கடன் பிரச்னை இருப்பதாக முந்தைய எபிசோடுகளில் சொல்லியிருந்தார். இந்நிலையில் அவர் இந்தவார எவிக்ஷனில் எலிமினேட் செய்யப்படவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !