பிரீயட், பேண்டஸி படமாக 'தனுஷ் 56' : மாரி செல்வராஜ் தகவல்
நடிகர் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'கர்ணன்'. இந்த படத்திற்கு பின் மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணுவதாக ஏற்கனவே செய்தி வந்தது. தற்போது தனுஷின் 56வது படத்தை இவர் இயக்க உள்ளார். இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.
கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகளில் திவீரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில் தனுஷ் 56 படம் குறித்து கூறியதாவது, நான் இதுவரை முயற்சி செய்யாத கதைக்களம் பிரீயட், பேண்டஸி மற்றும் அரசியல் கலந்த ஜானரில் இப்படம் உருவாகிறது. இந்த கதை ஆரம்பிக்கும் இடத்தில் தான் நிறைவு பெறும். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களின் தொடக்க புள்ளியாக இப்படம் உருவாகும் என்றார்.
இது முழுக்க பேண்டஸி படம் என கூற முடியாது, ஆனாலும், பேண்டஸி காட்சிகளும் இடம் பெறுகிறது. இப்போது தான் இந்த படம் சரியான பாதையை நோக்கி பயணிக்கிறது. இந்த கதையை முதலில் தனுஷ் உடன் பகிர்ந்த போது அவர் இது உங்கள் திரைப்பயணத்திலும், என் திரைபயணத்திலும் மிகப்பெரிய படமாக அமையும் என்றார் என தெரிவித்துள்ளார்.