எஜமான் பட காட்சியை போன்றே விஜய்க்கு வைத்தேன் : பரதன்
ADDED : 202 days ago
தமிழில் தில், தூள், கில்லி, வீரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பரதன். இவர் நடிகர் விஜய்யை வைத்து அழகிய தமிழ்மகன், பைரவா ஆகிய படங்களை இயக்கினார். இவர் அளித்த பேட்டியில் அழகிய தமிழ்மகன் படத்தை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில் அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற அந்த 'மதுரைக்கு போகாதடி' பாடலில் விஜய் வேஸ்டி, சட்டை மற்றும் மாலை அணிந்து நடந்து வரும் காட்சியை நான் எஜமான் படத்தில் ரஜினி நடந்து வரும் காட்சியை அடிப்படையாக கொண்டு படமாக்கினேன் என தெரிவித்துள்ளார்.