ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங்
ADDED : 12 minutes ago
இந்திய அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 700க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜித் சிங். ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சுமார் 28 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். தமிழிலும் சுமார் நான்கு பாடல்களை பாடியுள்ளார். இரண்டு முறை தேசிய விருது மற்றும் இந்தியாவின் பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கடந்த மாதத்தில் திடீரென அர்ஜித் சிங் தான் பாடகராக ஓய்வு பெறுவதை அறிவித்தார். இந்த நிலையில் அர்ஜித் சிங் தற்போது அவர் மேற்கு வங்காளத்தில் உள்ள ஜியாங் என்கிற தனது சொந்த ஊரில் 'ஹேசல்' என்கிற பெயரில் ஹோட்டல் தொடங்கி ரூ. 40க்கு மதிய சாப்பாடு வழங்கி வருகிறாராம். இது அங்குள்ள மக்களை குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.