உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வசூல் விவரங்கள் என்பது மிகையானவை அல்லது போலியானவை - 'வாரிசு' தயாரிப்பாளர்

வசூல் விவரங்கள் என்பது மிகையானவை அல்லது போலியானவை - 'வாரிசு' தயாரிப்பாளர்


தமிழில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்தவர் பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கில் வினியோகஸ்தராகவும், பல தியேட்டர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும் இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியாகும் வசூல் விவரங்கள் என்பவை மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது போலியானதாகவோ தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

“ஒரு முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படத்தின் உண்மையான வசூல் விவரங்கள் அதன் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், ஒரு படத்தின் வசூல் புள்ளி விவரங்கள் மற்றொரு படத்திற்கான அளவுகோலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சூழலில் திரையுலகம் சிக்கியுள்ளது.

இதன் விளைவாக, நட்சத்திரங்களின் மற்றும் அவர்களின் ரசிகர்களின் மனநிறைவை அல்லது கவுரவத்தை திருப்திப்படுத்த, மிகைப்படுத்தப்பட்ட வசூல் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுகிறது.

குறிப்பிட்ட தரப்பினரைத் திருப்திப்படுத்தவும், போட்டியிடும் ரசிகர் குழுக்களிடையே தங்கள் நட்சத்திரமே உயர்ந்தவர் என்ற பிம்பத்தைத் தக்கவைக்கவும் இத்தகைய வசூல் அறிவிப்புகள் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன.

திரைப்படங்களின் பட்ஜெட் உயர்வுக்கு நட்சத்திரங்களின் ஊதியம் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது. பல 'பான்-இந்தியா' திரைப்படங்களில், ஒரு முன்னணி நட்சத்திரத்தின் ஊதியம் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை கூட இருக்கலாம்.

நட்சத்திரங்களின் ஊதியம் பெருமளவு உயர்ந்திருப்பது, தயாரிப்புச் செலவுகள் அதிகரிப்பு, டிக்கெட் விலைகள் உயர்வு, திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையவும் காரணமாக அமைந்துள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !