உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழகத்தில் 60 கோடி வசூல் கடந்த 'சீன்'

தமிழகத்தில் 60 கோடி வசூல் கடந்த 'சீன்'

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் நவம்பர் 6ம் தேதி வெளியான படம் 'சீன்'.

இப்படம் மூன்று நாட்களில் உலக அளவில் 145 கோடி வசூலித்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். தமிழகத்தில் இன்று காலை காட்சியுடன் இப்படம் 60 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தமிழக வினியோக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் தொடர்ந்து 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன்' என ஹாட்ரிக் வெற்றியையும், உலக அளவில் ஹாட்ரிக் 100 கோடி வசூலையும் கடந்துள்ளார் சூர்யா.

இப்படம் உலக அளவில் வரும் நாட்களில் 200 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !