27ம் தேதி 'திருவிளையாடல்' ரீ ரிலீஸ்
ADDED : 16 minutes ago
ஏ.பி நாகராஜன் இயக்கத்திலும் கே.வி மகாதேவன் இசையிலும் சிவாஜி நடிப்பிலும் 1965ம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் மாபெரும் வெற்றி பெற்றது. சிவாஜியுடன் முத்துராமன், டி எஸ் பாலையா, நாகேஷ், ஏபி நாகராஜன், சாவித்திரி, தேவிகா நாகேஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
லண்டனிலும், ஜெர்மனியிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பாக ஜி லதா வெளியிடுகிறார்.