உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தேசிய விருது, 4 மொழிகளில் ரீமேக் : 'கை கொடுத்த தெய்வம்'-ன் சாதனை

பிளாஷ்பேக் : தேசிய விருது, 4 மொழிகளில் ரீமேக் : 'கை கொடுத்த தெய்வம்'-ன் சாதனை


1964ம் ஆண்டு வெளிவந்த படம் 'கை கொடுத்த தெய்வம்'. கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஒரு மனிதனின் வாழ்வில் இன்னொரு மனிதன் எப்படி தெய்வமாகிறான் என்பதுதான் படத்தின் கதை. தற்கொலைக்கு முயற்சி செய்யும் எஸ் எஸ் ராஜேந்திரனை காப்பாற்றி அவனுக்காகவே வாழும் சிவாஜியின் கதை. இரு நண்பர்களின் ஆழமான நட்பையும் அதனால் வரும் பிரச்னைகளையும் அழகாக பேசிய படம்.

இந்தப் படம் அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் 'மரபுராணி கதா' என்ற பெயரிலும் மலையாளத்தில் 'பலுங்கு பத்திரம்' என்ற பெயரிலும் இந்தியில் 'பியார் கி கஹானி' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !