உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரெஜினா படத்திற்கு ‛ஆர் எக்ஸ்' என தலைப்பு

ரெஜினா படத்திற்கு ‛ஆர் எக்ஸ்' என தலைப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக இணைந்து தமிழில் தயாரிக்கும் புதிய படத்திற்கு 'ஆர் எக்ஸ் - RX' என பெயரிடப்பட்டு அதன் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

விஷால் வெங்கட் இயக்க, ரெஜினா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களில் மருத்துவம் சார்ந்த குறியீடுகள் இருப்பதால் இது மெடிக்கல் மாபியாவை பற்றிய திரில்லர் படைப்பாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !