உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு, 'தர்மன்' படத்தின் அடுத்த அப்டேட்

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு, 'தர்மன்' படத்தின் அடுத்த அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தர்மன்'. இப்படத்தின் இரண்டு அப்டேட்டுகளை நேற்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தார்கள்.

தீபாவளியை முன்னிட்டு ரஜினிகாந்த் இடம் பெற்ற புதிய போஸ்டர் ஒன்று தீபாவளி வாழ்த்துகளுடன் வெளியிடப்பட்டது. அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்த இரண்டு அப்டேட்டுகளுக்குப் பிறகு படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, “தலைவரின் தோற்றத்தை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த அப்டேட் டிசம்பர் 12 அன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 12 ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வர உள்ள அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் இப்போதே காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !