நாய்க்கு உணவளியுங்கள்: திரிஷா வேண்டுகோள்
ப்ளூ கிராஸ் ஆதரவாளரான திரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ள வேண்டுகோள்: இந்த தீபாவளிக்கு, நான் ஒரு சிறப்பான காரியத்தைச் செய்கிறேன். மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு உணவுக்கான ஆதரவை (sponsor) வழங்குகிறேன். வெறும் ரூ.1,000ல் மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவளிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது 30 நாட்களுக்கு வயிறு நிறைந்த உணவும், மகிழ்ச்சியான தருணங்களும் ஆகும்! இந்த தீபாவளிக்கு, நீங்களும் என்னுடன் ஏன் இணையக்கூடாது?
ரூ.1,000 வழங்கி ஒரு நாயின் உணவுக்கு ஆதரவளியுங்கள், அவற்றின் வாழ்க்கையில் ஒரு சிறிய மகிழ்ச்சியைக் கொண்டு வாருங்கள். 'ப்ளூ கிராஸ் ஆப் இந்தியா' (Blue Cross of India) அமைப்பிற்கு நிதியுதவி செய்யுங்கள். இந்த தீபாவளியை அவர்களுக்கும் சிறப்பானதாக மாற்றுவோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.