உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அரசன்' முன்னோட்ட வீடியோ வெளியீடு தள்ளி வைப்பு ?

'அரசன்' முன்னோட்ட வீடியோ வெளியீடு தள்ளி வைப்பு ?

வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்பரசன், பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அரசன்'. சுமார் ஒரு வருட காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்திற்கான முன்னோட்ட வீடியோ ஒன்றை நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்ததாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அந்த வீடியோவையும் எடிட் செய்து தயாராக வைத்திருந்தார்களாம். ஆனால், அதற்கு இசையமைக்க வேண்டிய அனிருத், அவரது திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதால் பின்னணி இசையை முடித்துத் தர முடியவில்லையாம்.

எனவே, நாளை வெளியிட முடிவு செய்திருந்த 'அரசன்' முன்னோட்ட வீடியோவை தள்ளி வைத்துள்ளார்களாம். 'அரசன்' படத்தின் தயாரிப்பாளரான தாணு தயாரித்து அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள 'டிரைன்' படத்துடன் 'அரசன்' முன்னோட்ட வீடியோ வெளியிடலாம் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !