உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காவியை கவர்ச்சிக்கு பயன்படுத்துதா? : ஷாருக்கானுக்கு கண்டனம்

காவியை கவர்ச்சிக்கு பயன்படுத்துதா? : ஷாருக்கானுக்கு கண்டனம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இதற்கு முன்பு நடித்த 'பதான், ஜவான்' படத்தில் நாயகி தீபிகா படுகோனேவை கவர்ச்சியாக காட்டினார். காவி நிற பிகினி உடை அணிந்த அவரது படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் 'கிங்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இதில் தீபிகா படுகோன காவி உடை அணிந்து ஷாருக்குடன் ஆடுகிறார். ஷாருக்கான் திட்டமிட்டே இந்துக்களின் புனித ஆடை நிறமான காவியை அவமதித்து வருவதாக அவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டில்லி பா.ஜ.க எம்.எல்.ஏ. ரவி நகி அளித்துள்ள பேட்டியில், ''ஷாருக்கான் ஜிஹாத்தில் ஈடுபடுகிறார். இந்த நாட்டில் பணம் சம்பாதித்துவிட்டு, நாட்டிற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார். தீபிகா படுகோனை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார். இதற்குப் பின்னால் ஜிஹாதிகள் இருக்கிறார்கள். நான் ஷாருக்கானை ஜிஹாதி என்றுதான் அழைப்பேன்.

நாங்கள் நம்பும் சனாதன தர்மத்தில், இதுபோன்ற உடைகளை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனமாடுகிறார்கள். இந்தக் காட்சியானது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு சதியாகும். இந்தக் காட்சி மாற்றப்படா விட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும். சனாதன தர்மத்திற்கு எதிரான எதையும் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நாங்கள் ஷாருக் கானை எச்சரிக்கிறோம். 'கிங்' படத்தை நாடு முழுவதும் புறக்கணிப்போம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !