உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் நாளில் 30 கோடி வசூலைக் கடந்த 'சீன்'

முதல் நாளில் 30 கோடி வசூலைக் கடந்த 'சீன்'

மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'சீன்'. இப்படம் முதல் நாளில் 30 முதல் 35 கோடி வரையில் வசூலித்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

சூர்யா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்கள் நல்ல வசூலைக் கொடுத்ததால் 'சீன்' படத்திற்கு சுமார் 80 கோடிக்கும் அதிகமான அளவில் வியாபாரம் நடந்திருக்கிறது. 'கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படங்களின் முதல் நாள் வசூலை விடவும் இந்தப் படம் கூடுதலாக வசூலித்திருக்கிறது என்கிறார்கள்.

இன்று நாளை, தீபாவளி நாள், அதற்கடுத்து திங்களும் விடுமுறை நாள் என்பதால் இப்படத்திற்கான முன்பதிவு 50 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது. வார இறுதிக்குள் 100 கோடி வசூலை இந்தப் படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !