பொங்கலுக்கு வரும் 'டிமான்டி காலனி 3'
ADDED : 23 minutes ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' முதல் பாகம் 2015ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2024ம் ஆண்டிலும் வெளியானது. 2 கோடியில் தயாரிக்கப்பட்ட முதல் பாகம் 25 கோடிக்கு மேல் வசூலித்தது. 25 கோடியில் தயாரிக்கப்பட்ட 2வது பாகம் 80 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனால் 'டிமான்டி காலனி' 3ம் பாகம் உருவானது. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் முடிவடைந்தும் சில மாதங்களாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. கடைசியாக செப்டம்பர் 11ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால், அப்போதும் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட போஸ்டரில், பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.