இந்திய சினிமாவிற்கு உலகளாவிய கதவுகளைத் திறந்த ராஜமவுலி! -ரன்பீர் கபூர் பாராட்டு
தற்போது 'ராமாயணா' படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் இரண்டு நாட்களை விட சனிக்கிழமையன்று அதிக வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்தில் ராமராக முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய, 'ஆர் ஆர் ஆர்' படம் குறித்தும், அது இந்திய சினிமாவிற்கு உலக அளவில் கதவுகளைத் திறக்க எப்படி உதவியது என்பது குறித்தும் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ''ஆர் ஆர் ஆர் படம் வெளிநாட்டு பார்வையாளர்கள் மூலம் உலக அளவில் அதிக வசூலை ஈட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களில் ஏராளமான வெளிநாட்டவர்கள் அந்த படத்தைப் பார்த்து ரசித்தனர். ஆர் ஆர் ஆர் படம் நமக்கான உலகளாவிய கதவுகளை உண்மையிலேயே திறந்து விட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இப்போது நாங்கள் 'ராமாயணா' படத்தின் மூலம் 'வாரணாசி' படத்திற்காக இந்த கதவுகளை மேலும் திறப்போம்.
ஆர் ஆர் ஆர் படம் வழியமைத்துக் கொடுத்தது. இப்போது ராமாயணா அதைப் பின்தொடர்கிறது. அடுத்து வாரணாசி வரவிருக்கிறது. இந்திய சினிமா உலக அரங்கில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கப் போகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணா படத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.