உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு: 'சண்டியர்' வாய்ப்பு குறித்து நெகிழ்ந்த எஸ்யு அருண்குமார்

பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு: 'சண்டியர்' வாய்ப்பு குறித்து நெகிழ்ந்த எஸ்யு அருண்குமார்


கமல்ஹாசன் நடிப்பில், 'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீரதீர சூரன்' படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கமல் தயாரிக்கிறார்.

கமல் பட வாய்ப்பு குறித்து எஸ்.யு.அருண்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உன்னத மகா கலைஞன் கமல்ஹாசனுடன் கைகோர்த்து நிற்கிறேன்.

என்னை இயக்குனராகத் தேர்ந்தெடுத்து என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை நான் இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.

இப்பெருங்கனவை நிஜமாக்க உதவிய பெருமதிப்பிற்குரிய அண்ணன் மகேந்திரன், பேரன்பிற்குரிய நண்பன் டிஸ்னி ஆகியோருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, நானும் எனது குழுவும் முழு கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து இந்த திரைப்படத்தை ஆகச்சிறந்த படைப்பாக சினிமா ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !