சிவகார்த்திகேயனின் ‛சேயோன்'
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மீண்டும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதை தற்போது ‛தாய் கிழவி' என்ற படத்தை இயக்கி உள்ள சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இதற்கு ‛சேயோன்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கையில் அரிவாள், சுற்றிலும் மயில்கள் நிற்க கிராமத்து ஸ்டைலில் சிவகார்த்திகேயன் உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு நாளை துவங்குகிறது. கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் டர்மரிக் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
ராதிகாவை வைத்து தாய் கிழவி படத்தை இயக்கி உள்ளார் சிவகுமார் முருகேசன். இந்தப்படம் இந்தவாரம் வெளியாவதாக இருந்தது. இப்போது அடுத்தவாரத்திற்கு அதாவது பிப்., 27க்கு தள்ளி வைத்துள்ளனர். கிராமத்து ஸ்டைலில் அசத்தி உள்ளார் நடிகை ராதிகா.
‛பராசக்தி' படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் பெரிது என்பதால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த இடைவெளியில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.