உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தானாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர்

தானாக சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகியதில் அந்த நடிகருக்கு தான் பெரிய வருத்தமாம். தயாரிப்பாளர் தரப்புக்கு ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகையை காட்டி பேரம் பேசியும் நடிகரின் வேண்டுகோளுக்கிணங்க தியேட்டரில் தான் ரிலீஸ் என இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் நெகிழ்ந்து போன நடிகர், தயாரிப்பாளரின் அடுத்த படத்துக்கான சம்பளத்தில் கணிசமான தொகையை குறைத்துள்ளார். தயாரிப்பாளர் கேட்டதற்கு 'நீங்களே வட்டி கட்டி சிரமத்துல இருப்பீங்க… எனக்காக தானே அதையெல்லாம் பொறுத்துக்கறீங்க…அதான்' என்று நெகிழ்ந்துள்ளார். முன்பெல்லாம் சென்னை வந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் தயாரிப்பாளர் இப்போது நடிகரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !