உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'என்ன சொல்ல போகிறாய்' பொங்கல் ரிலீஸ்

'என்ன சொல்ல போகிறாய்' பொங்கல் ரிலீஸ்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்துள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல சிறிய பட்ஜெட் படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியிட ஆயத்தமாகியுள்ளன.

அந்த வகையில், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'என்ன சொல்ல போகிறாய்' படமும் பொங்கல் அன்று வெளியாகிறது. இதில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !