உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்'

'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்'

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையமைப்பில், யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்சிக்'. மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் நேற்று காலை கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

நேற்று இரவுக்குள் 100 மில்லியன் டிஜிட்டல் வியூஸ்களை இந்த டீசர் பெற்ற நிலையில் 24 மணிநேரத்தில் 197 மில்லியன் பார்வைகளை பெற்றதாக தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

யூ டியூப் தளத்தைப் பொறுத்தவரையில், கன்னட டீசரை விட தெலுங்கு மற்றும் ஹிந்தி டீசர்கள் அதிக வியூஸ்களைப் பெற்றுள்ளது. ஹிந்தி டீசர் தற்போது 22 மில்லியன், தெலுங்கு டீசர் 11 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ள நிலையில், கன்னட டீசர் 7 மில்லியன் வியூஸ்களை மட்டுமே கடந்துள்ளது.

தமிழ் டீசர் 5 மில்லியன், மலையாள டீசர் 2 மில்லியன் வியூஸ்களையு கடந்து யூ டியுப் தளத்தில் மொத்தமாக 47 மில்லியன் வியூஸ்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

இது யஷ் நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' டீசருடன் ஒப்பிடுகையில் சுமார் 20 மில்லியன் குறைவு. 2021ல் வெளியான அந்த டீசர் 24 மணி நேரத்தில் யு டியூப் தளத்தில் மட்டும் 68 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !