மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1361 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1361 days ago
சித்திரை செவ்வானம், ரைட்டர் படங்களைத் தொடர்ந்து சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் பப்ளிக். புதுமுக இயக்குனர் ரா.பரமன் இயக்கும் இந்த படத்தில் போஸ் வெங்கட்டும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். கே. கே .ஆர். சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டரில் சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம் ,நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத் உள்ளிட்ட பல மக்கள் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது. இப்படி சமூக மாற்றத்திற்காக போராடி வந்தவர்களின் படங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றிருப்பதால் இந்த பப்ளிக் படத்தின் போஸ்டர் மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1361 days ago
1361 days ago