மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1360 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1360 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1360 days ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்கு, தமிழ்ப் படமான 'வாத்தி' படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. அதன்பின்னர் படத்தின் படப்பிடிப்பும் அங்கு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இதனிடையே, படத்தின் கதாநாயகியான சம்யுக்தா மேனன் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால், அவர் படத்திலிருந்து விலகவில்லை எனவும், படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன், இப்படியான செய்தி படம் ஆரம்பமான சில நாளிலியே வெளியாகிறது என தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
சம்யுக்தா மேனன் தமிழில் இதற்கு முன்பு 'களரி, ஜுலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்தவர்தான். அப்போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன்பின் சில முக்கிய மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பவன்கல்யாண், ராணா டகுபட்டி நடிக்கும் 'பீம்லா நாயக்' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
1360 days ago
1360 days ago
1360 days ago