உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உடல் எடையைக் குறைத்த கீரவாணி : அனுபம் கேர் பாராட்டு

உடல் எடையைக் குறைத்த கீரவாணி : அனுபம் கேர் பாராட்டு

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளரான கீரவாணி, ஹிந்தி நடிகர் அனுபம் கேர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள். குண்டான உடல் தோற்றம் கொண்டவர் கீரவாணி. அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார் என அவரது நண்பர் நடிகர் அனுபம் கேர், புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், “எனது அன்பு நண்பரும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளருமான எம்எம். கீரவாணி, தனது விடாமுயற்சியால் வியக்கத்தக்க வகையில் 22 கிலோ எடையைக் குறைத்துள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பும் உறுதியும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

ஐதராபாத் பயணத்தின்போது அவரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டார். அவரது நடையில் இருந்த துள்ளலும், முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அவரைப் பார்க்கும்போதே பெருமையாக இருந்தது.

கீரவாணி, இசையில் நீங்கள் ஒரு மேதை, அதேபோல், மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்துள்ளீர்கள். உங்களுடைய இந்த புதிய அத்தியாயம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பரே. உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! ஜெய் ஹோ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !