தமிழில் அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் சாய் பல்லவி
தமிழகத்தைச் சேர்ந்த நடிகையாக இருந்தாலும் தமிழுக்கு முன்பாக மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் சாய் பல்லவி. தமிழில் அறிமுகமான பின் அவரது ஆரம்ப காலப் படங்கள் வெற்றியாக அமையவில்லை.
'தியா, கணம், மாரி 2, என்ஜிகே,' என தொடர் தோல்விகளைத்தான் சந்தித்து வந்தார். 2022ல் வெளிவந்த 'கார்கி' படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அடுத்து 2024ல் வெளியான 'அமரன்' படம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூட எதிர்பார்த்தார்கள்.
ஹிந்தியில் இந்த வருடம் 'ஏக் தின்' படம் மூலம் அறிமுகமானார் சாய் பல்லவி. ஆனால், அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் கடந்த வாரம் வெளியான 'ராமாயணா' படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். அவரது தேர்வு குறித்து எழுந்த சர்ச்சைகளையும் தனது நடிப்பால் முறியடித்துள்ளார்.
அடுத்து தமிழில் நவம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள 'ஒம்' படத்தில் நடித்துள்ளார். அதில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதற்கடுத்து ஜனவரி 29ல் வெளியாக உள்ள 'இஞ்சி வெல்லம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அடுத்தடுத்த இந்த இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக இருக்கின்றன.
இரண்டு படங்களும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளதால் மற்ற மொழிகளிலும் எதிர்பார்க்கப்படும் படங்களாக அமைந்துள்ளன.