உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா ஆகிறது சோனியாவின் சுயசரிதை

சினிமா ஆகிறது சோனியாவின் சுயசரிதை


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் சுயசரிதையான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் அவர் கூறியுள்ள கருத்துகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சோனியாக எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் அவரது வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்படுவதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஜக்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஒரு கடலைப் போல ஆழமானது. சோனியா அதனை முழுமையாக ஆராய்ந்துள்ளார். அதை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திரைப்படமாக்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் படத் தயரிப்புக்காக தங்களால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்கப்படும். இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் மற்ற மொழிகளில் டப் செய்யபப்படும். படப்பிடிப்பைத் தொடங்கி வைக்க மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கவுட் ஆகியோர் அழைக்கப்படுவார்கள், என்றார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சங்கரெட்டி சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பளர் ஜூலகந்தி ஆஞ்சிநேயலு தனது பங்களிப்பாக 2 கோடி தருவதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !