சமந்தா வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ!
ADDED : 1513 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் சமந்தா, தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் அடுத்தடுத்து நடிக்கப் போகிறார். மேலும், தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் ஜிம்மில் உள்ள உபகரணங்களை கொண்டுதான் ஒர்க்கவுட் செய்வார்கள். ஆனால் சமந்தாவோ எந்த கருவிகளும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பயிற்சியாளர் முன்னிலையில் சமந்தா உடற்பயிற்சி செய்யும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.