மலையாள நடிகை தேவிகா திருமணம் : இசை அமைப்பாளரை மணந்தார்
ADDED : 1612 days ago
பிரபல மலையாள நடிகை மற்றும் நடன கலைஞர் தேவிகா நம்பியார். கலாபமழா, ஒண், வசந்தத்தின்ட கனல் விழிகளில், விகடகுமாரன், காட்டுபனையில் ரித்விக் ரோஷன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மயில் மாறை மற்றும் கணேசா மீண்டும் சந்திப்போம் படங்களில் நடித்தார். 10க்கும் மேற்பபட்ட மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கொச்சி ஹீஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
தேவிகாவுக்கும் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் மாதேவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிபோடப்பட்டு வந்த திருமணம் குரூவாயூர் கோவிலில் எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.