மகேந்திரனின் 2 புதிய படங்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன், வளர்ந்து வாலிபமான பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு திருப்பம் தந்த படம் மாஸ்டர். இளம் வயது விஜய் சேதுபதியாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்தவருக்கு இப்போது ஹீரோவாக படங்கள் குவிந்து வருகிறது.
அவரது நடிப்பில் தயாராக உள்ள புதிய படம் அமிகோ கேரேஜ். இதில் மகேந்திரனுடன் தாசரதி, தீபா பாலு, அதிரா ராஜ், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள். முரளி ஸ்ரீனிவாசன் தயாரிக்கும் இந்த படத்தை பிரசாந்த் நாகராஜன் இயக்குகிறார், விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்கிறார், பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். இதில் மகேந்திரன் மெக்கானிக்காக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
மகேந்திரன் நடிக்கும் இன்னொரு படம் ரிப்பப்புரி. இதில் மகேந்திரனுடன் காவ்யா அறிவுமணி, ஆர்த்தி, நோபல் ஜேம்ஸ், மாரி, செல்லா, ஸ்ரீனி உள்பட பலர் நடிக்கிறார்கள். அருண் கார்த்திக் தயாரித்து இயக்குகிறார், தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார், திவாகரா தியாகராஜன் இசை அமைக்கிறார்.