உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்

சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்


கடந்த 2011ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் 'தெய்வத்திருமகள்'. இந்த படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். அதன்பிறகு 2014ம் ஆண்டில் ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சாரா அர்ஜுன், மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது 20 வயதாகும் சாரா அர்ஜுன் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த 'துரந்தர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சாரா அர்ஜுனை தமிழில் அறிமுகம் செய்த இயக்குனர் ஏ.எல்.விஜய் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''சாரா அர்ஜுன் ஹீரோயினாக நடித்த துரந்தர் படம் 1300 கோடி வசூல் செய்திருப்பதால் பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் ஆகி விட்டார். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஒவ்வொரு முறை பள்ளியில் தேர்வு முடிந்ததுமே விடுமுறை வரும்போதும் சென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார். அவர் என்னை அங்கிள் என்று அழைத்தாலும் சாரா அர்ஜுன் என் மகள் மாதிரிதான்'' என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல். விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !