மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1316 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1316 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1316 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1316 days ago
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா மற்றும் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஜேக்ஸ் பிஜாய்.
தற்போது மலையாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழில் இவரது இசையமைப்பில் கணம் என்கிற படம் உருவாகி வருகிறது. சர்வானந்த், ரித்து வர்மா இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் நடிகை அமலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்திற்காக தாய்மையை போற்றும் விதமாக ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் ஒரு பாடல் வெளியானது. இது ரசிகர்கள் பலரையும் கவர்ந்ததுடன் இயக்குனர் சிறுத்தை சிவாவையும் கவர்ந்துவிட்டது இந்த பாடல் குறித்து தனது பாராட்டுக்களை ஜேக்ஸ் பிஜாய்க்கு தெரிவித்துள்ளார் இயக்குனர் சிவா.
சிவாவின் பாராட்டுக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், தனது படங்களில் மெலடியான உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இடம்பெற செய்யும் இயக்குனர் சிவா எனது பாடலை பாராட்டியது பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
1316 days ago
1316 days ago
1316 days ago
1316 days ago