கேசினோ டப்பிங்கை முடித்த வாணி போஜன்
ADDED : 1313 days ago
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது கேசினோ என்கிற திரில்லர் படத்தில் நடித்துள்ளார் வாணி போஜன். இதில் கதாநாயகனாக மெஹந்தி சர்க்கஸ் மற்றும் பெண்குயின் ஆகிய படங்களில் நடித்த மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார்.
மார்க் ஜோயல் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் வாணி போஜன். டப்பிங் ஸ்டுடியோவில் டப்பிங் பேசியபோது தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நாயகன் நாயகி இருவரது கதாபாத்திரங்களும் வழக்கமானது அல்ல என கூறுகிறார் இயக்குனர் மார்க் ஜோயல்.