உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிட் தொடரில் என்ட்ரி கொடுத்த நடிகர் சாம்

ஹிட் தொடரில் என்ட்ரி கொடுத்த நடிகர் சாம்

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடர் சோக மழையுடன் சென்று கொண்டிருக்கிறது. ஒருபுறமும் கோபி - பாக்கியா விவகாரம் மற்றொரு புறம் எழில் - அமிர்தா காதல் விவகாரம் என ஜோடிகள் ஒருவரையொருவர் பிரிந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடரின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சாம் நடிக்கிறார். பிரிந்த ஜோடிகளை குறிப்பாக எழில்-அமிர்தா காதலை சேர்த்து வைப்பதற்கு தான் இந்த கதாபாத்திரம் சேர்க்கப்படுவதாக சீரியல் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த புதிய கதாபாத்திரம் பாசிட்டிவ் கேரக்டரா நெகட்டிவ் கேரக்டரா என்பது தெரியவில்லை. எனினும், இவர் என்ட்ரியை வைத்து இன்னும் பல எபிசோடுகளை சீரியல் குழு வெற்றிகரமாக ஓட்டிவிடும் என்று மட்டும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !