டாட்டூ தெரிய ஹாட் போட்டோ வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்
ADDED : 1330 days ago
தமிழில் மாதவன் -விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும், மாதவனுடன் மாறா படத்திலும் நடித்தார். அதோடு தெலுங்கில் அவர் நடித்த ஜெர்சி படம் ஹிட் அடித்ததால் தற்போது அங்கு பிசியான நடிகையாகிவிட்டார். மேலும் தமிழைவிட தெலுங்கில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சோசியல் மீடியாவில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது நெஞ்சில் டாட்டூ குத்திய கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள்.