உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானே வருவேன் - இரண்டு வேடங்களில் தனுஷ்

நானே வருவேன் - இரண்டு வேடங்களில் தனுஷ்

தெலுங்கில் வாத்தி படத்தில் நடித்து வந்த தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, இந்துஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது டீன் ஏஜ் பையன் போலவும், தாடி கெட்டப்பில் கண்ணாடி அணிந்து இருப்பது போலவும் இரண்டு விதமான தனுஷின் போட்டோக்களை செல்வராகவன் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார். குறிப்பாக டீன் ஏஜ் பையன் கெட்டப்பில் தோன்றும் தனுஷ் கலரிங் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாத கெட்டப்பில் தோன்றுகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். கொடி, பட்டாஸ் படங்களுக்கு பின் மீண்டும் இரண்டு வேடம் ஏற்று நடிக்கிறார் தனுஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !