உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை!

பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை!


தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111வது படத்தை கோபிசந்த் மல்லேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை விரிந்தி சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார்.

இந்த படத்திற்கு தமன் இசையமைப்பாளர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் கதை பட்ஜெட் அதிகமான காரணங்களால் இந்த படத்தின் கதையை மாற்றியுள்ளனர். இதனால் இந்த படத்தின் பொருட்செலவும் குறைந்துள்ளது.
ஆனால், நயன்தாரா ரூ. 11 கோடி சம்பளம் பெறுவதால் நினைத்த பட்ஜெட்டில் புதிய கதையை படமாக்க முடியாது என்கிற காரணத்தால் படக்குழு நயன்தாராவிற்கு பதிலாக வேறு கதாநாயகிகளை தேடி வருகின்றனர் என தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில் நயன்தாரா தான் உறுதியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்கிறார்கள். நான்காவது முறையாக பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !