'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்!
ADDED : 8 hours ago
தெலுங்கில் 'நின்னு கோரி, மஜிலி, குஷி' போன்ற காதல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. இவரின் அடுத்த படமான 'இருமுடி' படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கின்றார்.
இன்று இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் 'காவேரி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிமுக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரின் படி, ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் கணவர், மனைவி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆக்சன், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் ஐயப்பன் சுவாமி சுற்றி கதைகளம் நகர்கிறது என்கிறார்கள்.