எந்த அரசியலை பேச போகிறது 'பப்ளிக்' திரைப்படம்
ADDED : 1329 days ago
கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'பப்ளிக்'. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
முதலாவது ஸ்னீக்பீக்கில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நையாண்டி தனமாக சொல்லும் காட்சிகளும், 2வது ஸ்னீக்பீக்கில் அரசியல் தலைவர்களின் வேடமிட்டவர்கள், அரசியல் சொல்லி தருவது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள 3வது ஸ்னீக்பீக்கில் இன்றைய அரசியல் நிலையை காட்டுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வித்தியாசமான போஸ்டர்கள், ஸ்னீக்பீக்குகள் மூலம் கவனம் பெற்று வரும் பப்ளிக் படம், என்ன சொல்ல வருகிறது, எந்த அரசியலை பேச போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.