கோலாகலமாக நடைபெற்ற சுஜா வாசன் திருமணம்
ADDED : 1383 days ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தி நடித்து வந்தார் சுஜா வாசன். இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகினார். தற்போது அவருக்கு அமிதாப் வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், சுஜாவின் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
டிக் டாக் மூலம் பிரபலமான சுஜா வாசன், பொன்னுக்கு தங்க மனசு, வந்தாள் ஸ்ரீ தேவி ஆகிய தொடர்களில் முன்னதாக நடித்திருந்தார். இவருக்கு இளைஞர்கள் ரசிகர்ள் அதிகம். வைரலாகி வரும் சுஜா வாசன் திருமண புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.