உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார்

'லவ் டுடே' நடிகை ரவீனா ரவி திருமணம்; மலையாள இயக்குனர் தேவனை கரம்பிடித்தார்

பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி, மலையாள திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமாரை திருமணம் செய்துகொண்டுள்ளார். தேவன் ஜெயக்குமார் இயக்கிய மலையாளப் படமான 'வாலாட்டி' படத்தில் ரவீனா ரவி டப்பிங் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2024ம் ஆண்டு அக்டோபரில் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர் இருவரும். இந்த நிலையில், இன்று (மே 10) ரவீனா ரவி - தேவன் ஜெயக்குமார் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரவீனா ரவியின் அம்மாவான ஸ்ரீஜா ரவி, 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதோடு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் ரவீனா ரவியும் பல படங்களில் டப்பிங் பேசியதுடன் 'ஒரு கிடாயின் கருணை மனு', 'லவ் டுடே', 'மாமன்னன்' போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !