இசையமைப்பாளராக களமிறங்கும் மிஷ்கின்
ADDED : 1574 days ago
இயக்குனர் மிஷ்கின் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் அடுத்து இசையமைப்பாளராக களமிறங்க உள்ளார். இவர் இசையமைக்கும் முதல் படத்தை இவரின் தம்பி ஆதித்யா இயக்குகிறார். இதில் நாயகனாக எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தற்போது ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் படம் வெளியாக உள்ளது.