உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 2- இந்தி ரீமேக் படப்பிடிப்பு துவக்கம்

திரிஷ்யம் 2- இந்தி ரீமேக் படப்பிடிப்பு துவக்கம்

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லால் ,மீனா இணைந்து நடித்திருந்தார்கள். நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக்காகி உள்ளது.

இதையடுத்து இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரித்து வருகிறது. அபிஷேக் பதக் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மற்றும் ஸ்ரேயா இணைந்து நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது . படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் மற்றும் ஸ்ரேயா நடித்து வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !