உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!


சாமி இயக்கிய 'சிந்து சமவெளி' என்ற படத்தில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன்பிறகு 'பொறியாளர், வில் அம்பு, பார்க்கிங், லப்பர் பந்து' என பல படங்களில் நடித்தார். இதில் 'பார்க்கிங், லப்பர் பந்து' படங்கள் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தன.

இந்த நிலையில் தற்போது 'நூறு கோடி வானவில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கடந்த 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹரிஷ் கல்யாண். இந்நிலையில் தற்போது மார்ச் இரண்டாம் தேதியான நேற்று அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !