உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு

ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள 'யூத்' திரைப்படம் வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு இந்தப் படத்திற்காக பேட்டி ஒன்று அளித்துள்ளனர். சுராஜ் இந்த படம் தவிர்த்து ரஜினியின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் கர படத்திலும் நடித்துள்ளார். அப்போது இந்த இரு படங்கள் குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறுகையில், ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். எனக்கு நீண்ட காலமாக ரஜினியை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்தது. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர், என்றார்.

தனுஷ் பற்றி பேசும்போது, தனுஷ் ஒரு ஸ்டார் நடிகர். அவர் ஒரு பக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான், அசுரன் போன்ற படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !