மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்
ADDED : 1323 days ago
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் அகிலன். இதனை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் ஜெயம்ரவி கடற்படை அதிகாரியாக நடிக்கிறார். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே அருண் விஜய் நடித்த மாபியா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் கடற்படைக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம்.