ரஜினி படமா?; வதந்திகளை நம்ப வேண்டாம் - போனி கபூர் விளக்கம்
ADDED : 1479 days ago
ரஜினியின் 170வது படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனை போனி கபூர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛ரஜினி என்னுடைய நீண்ட நாள் நண்பர்; நாங்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவது நிச்சயமானால் அதை முதலில் அறிவிக்கும் நபர் நானாகதான் இருப்பேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்' என்றார்.