சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்; மீண்டும் வில்லனாக நடிக்கும் பரேஷ் ராவல்
ADDED : 1323 days ago
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று. டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். மீண்டும் சுதாவே ஹிந்தி ரீமேக்கையும் இயக்கப்போகிறார்.
இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்த பரேஷ் ராவல் ஒரு பேட்டியில், சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்த எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் இப்படத்தை அக்சய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் சுதா. இந்த படத்திலும் மீண்டும் நானே வில்லனாக நடிக்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.